Sunday 26 May 2013

சிந்தனை அடிமைகள்...!

குறிப்பிட்ட காலத்தில் மோலோங்கியிருக்கும் ஒரு கொள்கையை அது சரியா, தவறா என்று கூட ஆராயாமல், அதன் மீது மோகம் கொள்பவர்கள், சிந்தனை ரீதியாக அக்கொள்கைக்கு அடிமையாகி விட்டதாகத்தான் பொருள்.

இத்தகைய ‘சிந்தனை அடிமைகள்’ இறைவனுக்கு அடிபணிவதில்லை! தம் மன இச்சைகளுக்கே அவர்கள் அடிபணிகிறார்கள்! உலகில் இணைவைக்கும் கொள்கை ஓங்கிவிட்டால் அவர்கள் நிச்சயம் இறைவனுக்கு இணைவைக்கத் தொடங்கி விடுவார்கள்!

நிர்வாணமாகத் திரியும் பழக்கம் மக்களிடையே பரவலாகி விட்டால் அவர்கள் நிச்சயம் தம் ஆடைகளைக் கழற்றி எறிந்து விடுவார்கள்!

உலகம் அசுத்தங்களைத் தின்ன ஆரம்பித்தால் அசுத்தம்தான் தூய்மையென்றும், தூய்மை முற்றிலும் அசுத்தமே என்றும் அவர்கள் அடித்துக் கூறுவார்கள்!

அவர்களின் உள்ளமும் மூளையும் அடிமைகளே! அடிமைத்தனத்திற்காகவே அவை உருவாக்கப்பட்டிருக்கின்றன! இன்று ஐரோப்பியர்களின் செல்வாக்கு ஓங்கியுள்ள காரணத்தால் தம் உள்ளும் புறமும், வாழ்வின் ஒவ்வோர் அம்சத்திலும் அவர்கள் ஐரோப்பியாரய் மாறிவிடத் துடிக்கின்றார்கள்!

நாளை நீக்ரோக்களின் ஆதிக்கம் வந்துவிட்டால் அவர்கள் நிச்சயம் நீக்ரோக்களாகி விடுவார்கள்! தம் முகங்களில் கறுப்பு வண்ணத்தைப் பூசிக் கொள்வார்கள்! தம் உதடுகளைத் தடிப்பாக்கிக் கொள்வார்கள்! தம் தலைமுடியை நீக்ரோக்களைப் போல் சுருள் சுருளாக்கிக் கொள்வார்கள்! அங்கிருந்து வரும் ஒவ்வோரு பொருளையும் வணங்கித் தொழுதிட ஆரம்பிப்பார்கள்.

இத்தகையக் கொத்தடிமைகள் இஸ்லாத்திற்குத் தேவையில்லை!

-மௌலானா அபுல் அஃலா மௌதூதி(ரஹ்) Via FB

Home